பொருளாதார நெருக்கடியானது மக்கள் மீது பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது - சர்வதேச மன்னிப்பு சபை
Kanimoli
2 years ago
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியானது மக்கள் மீது பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள மக்கள் சுகாதாரம் மற்றும் உணவுக்கான உரிமைகளை அணுகுவதில் சவால்களை எதிர்கொள்கின்றனர்.
நாட்டில் தற்போதுள்ள சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
நிச்சயமற்ற வேலைகள் மற்றும் தினசரி ஊதியத்தை மட்டுமே வருமானமாக நம்பியிருக்கும் மக்களின் நிலை மற்றும் மலையக தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தநிலையில் நாட்டின் நெருக்கடி மற்றும் அதன் தாக்கங்கள் ஆழமடையும் மற்றும் பரந்த அளவில் பரவும் என்ற தீவிர கவலை உள்ளதாக மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.