அமிதாப் பச்சனுடன் திலினி பிரியாமாலி தொடர்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தகவல்

Kanimoli
2 years ago
 அமிதாப் பச்சனுடன் திலினி பிரியாமாலி தொடர்பு  குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தகவல்

பிரபல இந்திய நடிகர் அமிதாப் பச்சனை இலங்கைக்கு அழைத்து வந்து பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்த திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியாமாலி திட்டமிட்டிருந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கோடீஸ்வர தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், நடிகர் நடிகைகள், பௌத்த துறவிகளை ஏமாற்றி பெறப்பட்ட பல கோடி ரூபாயை செலவு செய்து கொழும்பில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பிரபல நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு நடக்க இருந்த இந்த நிகழ்ச்சியை பார்க்க அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல பிரபலங்களை அழைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

திலினி பிரியமாலிக்கு சொந்தமான திகோ திரைப்பட நிறுவனம் கடந்த மார்ச் 19ஆம் திகதி கொழும்பு ஷெங்கிலா ஹோட்டலில் “மாயாஜால” என்ற திரைப்படத்திற்கான படபூஜை ஒன்றை நடத்தியதுடன், அதற்காக 350 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. .

இந்நாட்டு சினிமா வரலாற்றில் மிகப் பெரிய படபூஜையாக கருதப்படும் மாயாஜால திரைப்படத்தின் படபூஜை நிகழ்வில் பிரபல இந்திய நடிகை மோனி ராய்  உள்ளிட்ட நடிகர் நடிகைகள் மற்றும் அமைச்சர்கள் குழுவும் கலந்துகொண்டனர்.

அந்த நிகழ்வில் கிடைத்த விளம்பரத்தின் பிரபலத்தன்மை அடிப்படையாக கொண்டு திலினி பிரியமாலி தனது மோசடிகளை வேகப்படுத்தியதாக தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!