கோப்பாய் கைதடி வீதியில் வெடிப்பு சம்பவம் இன்று காலை பதிவு

Kanimoli
2 years ago
கோப்பாய் கைதடி வீதியில் வெடிப்பு சம்பவம் இன்று காலை பதிவு

கோப்பாய் கைதடி வீதியில் வெடிப்பு சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளது.

நீர்வேலி பகுதியை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று இன்றைய தினம் கோப்பாய் கைதடி வீதியில் மரநடுகையில் ஈடுபடும் பொருட்டு சிரமதான பணியில் ஈடுபடும் போது மர்ம பொருள் ஒன்று வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வெடிப்பு சம்பவத்தின் போது நீர்வேலி ஊரெழு பகுதியைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவன பணியாளர்கள் இருவர் காயமடைந்த நிலையில் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவ தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் காயமடைந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில் தாங்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த பகுதியில் புல்லு வெட்டும் பணியில் ஈடுபடுவதாகவும் இன்றைய தினம் வழமை போல் தாங்கள் மரம் நடும் போவதற்காக புல்லு வெட்டிக் கொண்டிருந்தபோது திடீரென மர்மப் பொருள் வெடித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பான தடயவியல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!