தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்
Prathees
2 years ago
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக சமகி ஜன பலவேகய உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன.
ராஜகிரியில் உள்ள தேர்தல் கமிஷன் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலவும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டன.
குறிப்பிட்ட காலத்திற்குள் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர் என கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.