இலங்கையில் பிறந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை புதுடில்லி நீதிமன்றம் இன்று பிணையில் செல்ல அனுமதி

Kanimoli
1 year ago
 இலங்கையில் பிறந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை புதுடில்லி நீதிமன்றம் இன்று பிணையில் செல்ல அனுமதி

மோசடியாளராக பெயரிடப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் பணமோசடி வழக்கில் தொடர்புடையவராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையில் பிறந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை புதுடில்லி நீதிமன்றம் இன்று பிணையில் செல்ல அனுமதித்தது.

அவரை 50,000 ரூபா சொந்த பிணையிலும், அதே தொகையிலான சரிரப்பிணையில் செல்லவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில் குறித்த வழக்கு விசாரணையின்போது, ஜாக்குலினை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, கைதுகளின்போது தேடி மற்றும் தெரிவு செய்தல் கொள்கையை நடைமுறைப்படுத்தவேண்டாம் என்று காவல்துறையினரை எச்சரித்தார். 

முன்னாள் தொழிலதிபரான ஷிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கிடம் இருந்து சுகேஷ் சந்திரசேகர் அச்சுறுத்தி பறித்த 200 கோடி ரூபாய் மூலம் ஜாக்குலின் பெர்னாண்டஸ் பல்வேறு வாய்ப்புக்களை அனுபவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை அச்சுறுத்தி பறித்ததாக கூறப்படும் 200 கோடி ரூபாயில் இதுவரை 7.1 கோடி ரூபாவை பறிமுதல் செய்துள்ளதாகவும், மேலும் அவரிடம் இருந்து சொத்துக்களை பறிமுதல் செய்யமுடியும் என்றும் குறிப்பிட்ட அரச சட்டத்தரணி, ஜாக்குலினுக்கு பிணை வழங்கப்படக்கூடாது என்று வாதிட்டார்.

சுகேஷ் பற்றி அறிந்திருந்தும், பணத்துக்கு ஆசைப்பட்டு அவருடன் இணைந்து குற்றச் செயல்களில் பெர்ணான்டஸ் ஈடுபட்டதாகவும் அரச சட்டத்தரணி குற்றம் சுமத்தினார்.