வெலிஓயா காட்டுக்குள் காணாமல் போன பாடசாலை மாணவன் முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் மீட்பு
வெலிஓயாஇ ஜனகபுர பிரதேசத்தில் வசிக்கும் 12 வயதுடைய பாடசாலைக் சிறுவனொருவன் சுமார் இரண்டு நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் கடந்த 13ஆம் திகதி முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டதாக வெலிஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனகபுர கல்லூரியில் 7ஆம் ஆண்டில் கல்வி கற்கும் இந்த மாணவன் கடந்த 12ஆம் திகதி காலை ஏதோ தேவைக்காக ஜனகபுர பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று வீடு திரும்பவில்லை என மாணவியின் பெற்றோர் வெலிஓயா பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
பின்னர் பிரதேசவாசிகள், வெலிஓயா பொலிஸார், சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் இணைந்து காணாமல் போன சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் 13ஆம் திகதி மாலை ஜனகபுர காட்டில் இருந்து காணாமல் போன பாடசாலை மாணவர் முல்லைத்தீவு காப்புக்காட்டு பகுதியில் உள்ள முட்புதரில் கிடப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடும் மழை, பசி, இரவில் வன விலங்குகள் பயம் போன்றவற்றால் சிறுவன் மிகவும் பலவீனமாக இருந்ததால், சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்ததாகவும், தற்போது மாணவன் உடல் நலம் தேறி வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.