சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய பிரியந்தினி கமலசிங்கம் உள்ளக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்

Kanimoli
2 years ago
சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய பிரியந்தினி கமலசிங்கம் உள்ளக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்

தற்காலிகமாக கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய பிரியந்தினி கமலசிங்கம் உள்ளக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அலுவலகத்தில் இருந்து கிடைக்கப் பெற்ற அவசர இடம் மாற்றல் கடிதத்தில் குறித்த வைத்தியர் நாளை முதல் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு இணைப்பில் செல்ல பணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இன்று தனக்கு அங்குதான் இருக்க வேண்டும் எனக் கோரி கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இருந்ததாக அறிய முடிவதுடன் அவர் தனக்கு ஆதரவாக சிலரை வலுக்கட்டாயமாக கூட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்ய முனைவதாக அறிய முடிந்தது.

இருப்பினும் எமக்கு கிடைத்த தகவலின் படி, கிளிநொச்சிக்கு தற்போது கடமையில் உள்ள கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நேர்மையானவர் மக்கள் நலன் சார்ந்து சேவையாற்றக் கூடியவர் ஆக தெரிந்தவர்கள் என தடம் மாறாது கிடைக்கப் பெற்ற இடம் மாற்றலை செவ்வனே செய்வார் என நம்புகிறோம் என முகநூலில் ஊடகவியலாளர் ஒருவர் குறித்த தகவலை பதிவிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!