முறிகண்டி பிள்ளையார் கோவிலில் வாகனங்களை நிறுத்திப் பயணிப்பதன் காரணம் இதுதான்!நன்றி கிளிநொச்சி சமூகம்
யாழ் - கண்டி (A9) வீதியில் விபத்துக்கள் அதிகரிக்க முறிகண்டி பிள்ளையார் கோயிலில் வாகனங்கள் நிறுத்தப்படாமையும் ஒரு காரணம்...!
வவுனியா நகரிலிருந்து யாழ்ப்பாணம் ஏறக்குறைய 150 KM தூரத்தில் உள்ளது.
வவுனியாவிலிருந்து திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயம் ஏறத்தாழ 75 KM தூரத்திலுள்ளது.
அதாவது முறிகண்டி வவுனியாவுக்கும் யாழ் நகருக்கும் இடையே ஏறைக்குறைய மத்தியில் அமைந்த பிரதேசம்.
எனவே வாகன சாரதிகள் அதிக தூக்கத்தை போக்கி களைப்பு, சோர்வு, அசதி, மன உளைச்சல் இவைகளை களைந்து முகம் கழுவி பிராத்தனை செய்து உணவுண்டு செல்லும்போது, மீண்டும் புத்துணர்ச்சியுடன் களைப்பின்றி தமது பயணத்தை புதிய உத்வேகத்ததுடன் தொடர முடியும். இதற்குத்தான் எமது முன்னோர்கள் இது போன்ற வழிபாட்டு தலங்களை ஆங்காங்கே நிறுவினார்கள்.
மோட்டார் வாகன பாவனைகள் அதிகரித்துள்ள இக்காலத்தில், இவ்வழிபாட்டு தலங்களுடன் கூடிய நிறுத்துமிடங்கள் வீதி விபத்துக்களை பெருமளவு குறைக்க உதவும்.
நமது முன்னோர்களது எந்தவோர் செயலும், மிகநுட்பமான காரணகாரியத்துடன், மனிதனது 'நன்மை' ஒன்றை மட்டுமே கருத்திற்கொண்டு செய்யப்பட்டவையாகும்.
இது வெறும் பதிவு மட்டும் என்று எண்ணவேண்டாம்.. முறிகண்டி பிள்ளையாரை வணங்கி விட்டு சென்றவர்கள் பலர் விபத்தில் இருந்து உயிர் தப்பி இருக்கிறார்