சாரதிகள் தங்கும் அறையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சாரதிகள் கடமையில் இருந்து விலகியுள்ளதால் ரயில் பயணங்கள் இரத்து

Kanimoli
2 years ago
சாரதிகள் தங்கும் அறையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சாரதிகள் கடமையில் இருந்து விலகியுள்ளதால்  ரயில் பயணங்கள் இரத்து

சாரதிகள் தங்கும் அறையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சாரதிகள் கடமையில் இருந்து விலகியுள்ளதால் நேற்று காலை 10 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில்வே திணைக்களத்தின் கொழும்பு களஞ்சிய வளாக காரியாலயத்தில் உள்ள ஒரு அறை சாரதிகளுக்கான தற்காலிக தங்குமிட அறையாக வழங்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சாரதிகள் நேற்று காலை முதல் இந்த தொழிற் சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

அதற்கமைய, நேற்று இயக்கப்படவிருந்த எஸ்-09, எஸ்-10, எஸ்-12 ஆகிய ரயில் பெட்டிகள் பணியில் இருந்து விலக சாரதிகள் சங்கம் நடவடி்ககை மேற்கொண்டுள்ளது.

இதனால் காலை கொழும்பு கோட்டையில் இருந்து இயக்கப்படவிருந்த பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

ரயில் ரத்து செய்யப்பட்டதால், அலுவலகத்திற்குச் செல்ல எதிர்பார்த்திருந்த ஏராளமான பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

எப்படியிருப்பினும், நேற்று பிற்பகல் 1.00 மணியளவில், இந்த தொழிற்சங்க நடவடிக்கை நிறுத்தப்பட்டதாக ரயில்வே சாரதிகள் சங்கம் அறிவித்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!