மாணவர்கள் கல்வி கற்பதற்கு Student Visa பெற்றுத் தருவதாக கூறி மோசடி யில் ஈடுபட்ட ஒருவர் கைது
அவுஸ்ரேலியா மற்றும் கனடாவில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு Student Visa பெற்றுத் தருவதாக கூறி மோசடி யில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
கொழும்பு மோசடி விசாரணைகள் காரியாலய அதிகாரிகள் கடந்த (14) ஆம் திகதி இவரைக் கைது செய்தனர். கல்வி ஆலோசனை முகவர் நிலைய மொன்றை நடத்தி வந்த இவர், பாரிய நிதி மோசடியில் ஈடுபட் டுள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இவர், இம்மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இவர் மீது 33 பேர் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு, சுமார் மூன்று முதல் நான்கு கோடி ரூபா வரை மோசடி செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நிரந்தர வதிவிடமின்றி இடத்துக்கு இடம் சென்று தலைமறைவாக வாழ்ந்து வரும் இவர், மாளிகாவத்தை போதிராஜ மாவத்தையில் உள்ள வீடொன்ன்றில் பதுங்கி இருந்த போதே கைது செய்யப்பட்டார்.
மோசடியில் சிக்கிய நபர் ஒருவர், கடந்த (22) கொழும்பு மோசடி விசாரணை காரியாலயத்தின் 06 ஆம் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார். இதையடுத்தே இவர், கைதானார்.
முறைப்பாட்டாளரின் இருபத்தேழு இலட்சத்து முப்பத்தி ஐயாயி ரம் ரூபாவை இச்சந்தேக நபர் மோசடி செய்துள்ளார். கொழும்பு மோசடி விசாரணைகள் காரியாலயத்தில் இவருக்கு எதிராக மேலும் மூன்று முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐம்பத்தெட்டு இலட்சத்து பதினெட்டாயிரத்து எண்ணூறூ ரூபாவை இவர் மோசடி செய்துள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.