ஆண்டுதோறும் 3 ஆயிரம் இந்தியர்களுக்கு கிரீன் விசா வழங்க உள்ளதாக பிரித்தானிய அரசு அறிவிப்பு
Kanimoli
2 years ago
ஆண்டுதோறும் 3 ஆயிரம் இந்தியர்களுக்கு கிரீன் விசா வழங்க உள்ளதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.
இந்தோனேஷியாவில் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியும், இந்திய வம்சாளியைச் சேர்ந்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்த சில மணி நேரத்தில் இந்த அறிவிப்பை பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ளது.
இதன் மூலமாக பட்டப்படிப்பு முடித்த 30 வயது வரையிலானவர்கள் இந்த விசாவைப் பெற்று 2 ஆண்டுகள் வரையில் பிரித்தானியாவில் பணியாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.