விவசாய அமைச்சின் சுற்றாடல் அலகினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடுகை விழா நாளை நடைபெற உள்ளது.

Kanimoli
1 year ago
விவசாய அமைச்சின் சுற்றாடல் அலகினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடுகை விழா நாளை நடைபெற உள்ளது.

வடக்கில் மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் அலகினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடுகை விழா நாளை (16-11-2022) முற்பகல் 10 மணியளவில் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.

இந்த மரம் நடுகை விழாவினை விவசாய திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் மற்றும் மீன்பிடி பிரிவு ஆகிய இணைந்து ஏற்பாடு செய்வதுடன் மர நடுகை விழாவிற்கான ஒத்துழைப்பினை மரம் நடுகை இடங்களின் உள்ளூராட்சி சபைகள் வழங்குகின்றன.

யாழ்ப்பாணத்தில் கல்லுண்டாய் பகுதியிலும் கிளிநெச்சியில் இரணைமடு இடது கரை பகுதியிலும் முல்லைத்தீவில் ஏ9 மாங்குளம் வீதியின் இரு மருங்கிலும் வவுனியாவில் தாண்டிக் குளம் அரசு விதை உற்பத்தி பண்ணைப்பகுதியிலும் மன்னாரில் பாலாவி திருக்கேசரம் பகுதியிலும் ஏறக்குறைய 1500 மரங்கள் நாட்டப்பட உள்ளன.

இவற்றிற்கு மேலதிகமாக வட மாகாண மர நடுகை மாத பகுதியில் வட மாகாண விவசாய அமைச்சின் கீழ் உள்ள திணைக்கள வளாகங்களில் ஏறக்குறைய 600 பழ மரக்கன்றுகள் நாட்டுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு. அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!