போர் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பங்காற்றிய உரையை பாராட்டிய அமெரிக்கா
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபரை சந்தித்தபோது பிரதமர் நரேந்திர மோடி இது போருக்கான சகாப்தம் கிடையாது என்று தெரிவித்திருந்தார்.
மேலும் இந்தோனேசிய நாட்டில் சமீபத்தில் நடந்த ஜி-20 மாநாட்டின் கூட்டறிக்கையில் இது போருக்கான சகாப்தம் கிடையாது என்று மோடி புடினிடம் தெரிவித்ததை இணைத்து அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.
வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளராக இருக்கும் கேரீன் ஜீன்-பியார்ரே இது பற்றி தெரிவித்ததாவது, ஜி-20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறோம்.
ஜோ பைடன், இந்தோனேசிய அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இருவரிடமும் கலந்துரையாடி இருக்கிறார். இரண்டு தரப்பினரும் ஏற்கக்கூடிய விதத்தில் உச்சி மாநாட்டின் கடைசி அறிவிப்பு அமைந்தது.
இதற்கு இந்தியா பெரும் பங்கு வகித்துள்ளது. இது போருக்கான சகாப்தம் கிடையாது என்று மோடி தெளிவுபடுத்திவிட்டார் என தெரிவித்திருக்கிறார்.