உக்ரைன் போரை நிறுத்த ரஷ்ய நாடுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள மாட்டோம்-வெள்ளை மாளிகை தகவல்
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வெள்ளை மாளிகையானது, ரஷ்ய நாட்டுடன் போரை நிறுத்த அமைதி பேச்சு வார்த்தை மேற்கொள்ள உக்ரைன் ஜனாதிபதி தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.
இது பற்றி வெள்ளை மாளிகையினுடைய தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளராக இருக்கும் ஜான் கிர்பி தெரிவித்ததாவது, ரஷ்ய ஜனாதிபதி தங்கள் படைகளை உக்ரைனிலிருந்து வெளியேற்ற, பேச்சுவார்த்தை மூலமாக தான் முடிவு பெற முடியும் என்பதை நாங்கள் ஏற்கிறோம்.
பேச்சு வார்த்தைக்கு அவர் எப்போது தயார்? என்றும் எப்படி அந்த பேச்சு வார்த்தைகள் இருக்க வேண்டும்? என்றும் முடிவு எடுக்க வேண்டும்.
உக்ரைனில் போரை நிறுத்துவது பற்றி நாங்கள் ரஷ்யாவிடம் ஆலோசிக்க மாட்டோம் என்று தெரிவித்திருக்கிறார். மேலும், அவர்கள் உரையாடல்கள் மேற்கொள்ளவில்லை.
ஏனெனில், ஜெலன்ஸ்கி அதற்கு தயார் கிடையாது. ஜெலன்ஸ்கி பற்றி குறை சொல்ல இயலாது. ஏனென்றால் ரஷ்யா பேச்சுவார்த்தை மேற்கொள்ள தயார் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.