பங்களாதேஷ் எதிக்கட்சியான தேசியவாதக் கட்சி வெகுஜனப் போராட்டத்தை அறிவிக்க முடிவு
பங்களாதேஷ் எதிக்கட்சியான, தேசியவாதக் கட்சி (BNP), அவாமி லீக் அரசாங்கத்தை கவிழ்க்க "செய் அல்லது செத்து மடி" அதாவது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டதை போன்று, வெகுஜனப் போராட்டத்தை எதிர்வரும் டிசம்பரில் அறிவிக்கவுள்ளது.
உணவு மற்றும் எரிசக்தி விலை உயர்வு மற்றும் அதிகரித்து வரும் மின்சார உற்பத்தியில் கடுமையான சரிவு ஆகியவற்றின் மீதான மக்களின் கோபத்தைப் பயன்படுத்தி இந்த போராட்ட முயற்சி மேற்கொள்ளப்படுவதாக பெடரல் என்ற செய்தித் தளம் தெரிவித்துள்ளது.
பங்காளதேசத்தில் 1971,டிசம்பர் 16, அன்று பாகிஸ்தான் இராணுவம் சரணடைந்ததை நினைவுகூர்வதால், டிசம்பர் மாதம் பொதுவாக கொண்டாட்டங்களின் மாதமாகும்.
சமீப வரலாற்றில் இராணுவ வீரர்கள் சரணடைந்த மிகப்பெரிய சரணாகதி இதுவாகும்.
இந்தநிலையில், அவாமி லீக் அரசாங்கத்தைக் கவிழ்க்க, நாடு தழுவிய போராட்டத்திற்கான விரிவான திட்டத்தை டிசம்பர் 10ஆம் திகதி அறிவிக்கப் போவதாக பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (பிஎன்பி) தெரிவித்துள்ளது.
அவாமி லீக், பங்காள சுதந்திரப் போராட்டத்தை அப்போதைய கிழக்கு பாகிஸ்தானில் முன்னின்று நடத்தியது, அது டிசம்பர் 2008 நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றதிலிருந்து அதிகாரத்தில் இருந்து வருகிறது.
உக்ரைன் போர் பங்களாதேஷின் பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ளது. இப்போது வெளிநாட்டு கையிருப்பு, மூன்று மாதங்களுக்கான, இறக்குமதியை சமாளிக்கவே போதுமானதாக இல்லை.
இதனையடுத்து, அவாமி லீக் அரசாங்கம் இப்போது இஸ்லாமிய எதிர்ப்பின் கடுமையான அரசியல் சவாலை எதிர்கொள்கிறது.
இந்தநிலையில், பிரதம மந்திரி ஷேக் ஹசீனா, குழப்பத்தை உருவாக்கும் எந்தவொரு எதிர்க்கட்சியின் முயற்சியையும் நசுக்குவதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.