ஒப்பந்தங்கள் மற்றும் கோரப்படாத முன்மொழிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி
Prabha Praneetha
2 years ago
அரசாங்கத்திற்கு இடையேயான ஒப்பந்தங்கள் மற்றும் கோரப்படாத முன்மொழிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக கேள்விப்பத்திர அடிப்படையில் நிலக்கரி கொள்முதலை மேற்கொள்ள முயற்சிக்கப்பட்ட போதும், உரிய நிறுவனங்கள் முன்வராமை மற்றும் அரசாங்கத்திடம் டொலர் இல்லாமை என்பன, அந்த திட்டத்தை கைவிடச் செய்தன.
இதற்கிடையில் லக்விஜய ஆலைக்கான நிலக்கரியை கொள்வனவு செய்ய வேண்டியது இப்போது அவசர தேவையாக உள்ளது.
எதிர்வரும் ஜனவரி நடுப்பகுதி வரை மட்டுமே, அங்கு நிலக்கரி கையிருப்பில் உள்ளமையே இதற்கான காரணமாகும்.
இதேவேளை, சுவிஸ் சிங்கப்பூர் ஓவர்சீஸ் (Pte) லிமிட்டெட் நிறுவனத்தில் இருந்து கடந்த வியாழன் அன்று 60,000 தொன் நிலக்கரி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.