இலங்கையில் வேகமாக பரவிவரும் தொழுநோய்
Prabha Praneetha
2 years ago
இலங்கையில் வேகமாக தொழுநோய் பரவி வருவதாக தேசிய தொழுநோய் பிரசார பணிப்பாளர் மருத்துவர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் தொழுநோய் எதிர்ப்பு பிரசாரப் பிரிவின் தகவல்படி, மாணவர்களிடையே தொழுநோய் பரவுவது அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய பாடசாலை மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட, நாடு தழுவிய திட்டத்தைத் தொடர்ந்தே எண்ணிக்கையில் அதிகரிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையத்தின் தகவல்படி, 95 சதவீத மனிதர்களில் தொழுநோயை ஏற்படுத்துவதற்கு பக்டீரியாக்களே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.