பிரித்தானியர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்-உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பில் எச்சரிக்கை !

Nila
1 year ago
பிரித்தானியர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்-உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பில் எச்சரிக்கை !

பிரித்தானியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட தந்தை ஒருவர், ஒரே ஆண்டில், அதன் காரணமாக மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு லண்டனில் குடியிருந்து வந்த 49 வயதான பர்மிந்தர் சிங் சித்து என்பவரே சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஒரே ஆண்டில் மரணமடைந்துள்ளார்.அவருக்காக பெறப்பட்ட சிறுநீரகத்தில் புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளதாகவும், ஆனால் மருத்துவர்கள் அதனை கருத்தில் கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நான்கு மாதங்களுக்கு பின்னர் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் புற்றுநோயின் அறிகுறி கண்டறியப்பட்டாலும், நீர்க்கட்டி என நிராகரிக்கப்பட்டது.பின்னர், மிக ஆபத்தான புற்றுநோயாக கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை செய்துகொண்ட உறுப்பு மூலம் பரவியது. தமது கணவர் மருத்துவர்களை முழுமையாக நம்பினார், ஆனால் இந்த விடயத்தில் அவர்கள் எப்படி தவறிழைத்தார்கள் என நம்ப முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார் சித்துவின் மனைவி தர்ஜிந்தர்.

தற்போது இந்த வழக்கானது மேற்கு லண்டன் பகுதி விசாரணை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவரான Frank Dor தெரிவிக்கையில், எந்த அக்கறையும் இல்லை, குறித்த செய்தி அனைவரையும் மிகவும் அதிர்ச்சியடைய செய்துள்ளது என்றார்.

மேற்கு லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோவைச் சேர்ந்த சித்து, முதன்முதலில் தனது 30 வயதில் சிறுநீரகப் பிரச்சினைக்கு உள்ளானார். இதனையடுத்து இந்தியாவில் வெற்றிகரமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.ஆனால், கொரோனா ஊரடங்கு காலத்தில் அவருக்கு பெரும் சிக்கலை மீண்டும் ஏற்படுத்தியது. இதனையடுத்து, குறித்த சிறுநீரகத்தை நீக்கிவிட்டு, இன்னொன்றை புதிதாக பெற்று பொருத்திக்கொள்ள சித்து முடிவு செய்துள்ளார்.

மேலும், சித்துவுக்கு சிறுநீரகம் தானம் செய்தவர் புற்றுநோயால் இறந்தாரா அல்லது தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக இறந்தாரா என்பது அப்போது உறுதி செய்யப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!