மன்னர் சார்லஸின் முடிவால் ராஜகுடும்பத்து ஊழியர்களின் எதிர்காலம் தொடர்பில் கவலை

Nila
1 year ago
மன்னர் சார்லஸின் முடிவால்  ராஜகுடும்பத்து ஊழியர்களின் எதிர்காலம் தொடர்பில் கவலை

விண்ட்சர் மாளிகையில் எலிசபெத் ராணியாருக்கு உதவியாக இருந்த முக்கிய ஊழியர்கள் பலரை மன்னர் சார்லஸ் பணி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விண்ட்சர் எஸ்டேட்டில் முழுவதும் பணியாற்றும் ஊழியர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்களை மன்னர் சார்லஸ் பணி நீக்கம் செய்வார் என்றே கூறப்படுகிறது. ராணியார் உயிருடன் இருந்த வரையில், பணி நீக்கம் என்பது மிக மிக அரிதாகவே நடந்துள்ளது.ஆனால் தற்போது மன்னர் சார்லஸின் முடிவால் பெரும்பாலான ராஜகுடும்பத்து ஊழியர்கள் தங்கள் எதிர்காலம் தொடர்பில் கவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் பக்கிங்ஹாம் அரண்மனை எந்த கருத்தும் இதுவரை வெளியிடவில்லை.

சார்லஸ் மன்னர் குடியிருக்கும் கிளாரன்ஸ் மாளிகையில் பணியாற்றிவரும் ஊழியர்களில் 100 பேர்களுக்கு பணிநீக்கம் பற்றிய தகவல் அளிக்கப்பட்ட நிலையிலேயே தற்போது விண்ட்சர் மாளிகை ஊழியர்கள் தொடர்பில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.உண்மையில் இது ஒரு சோதனை காலம் என குறிப்பிட்டுள்ள விண்ட்சர் மாளிகை ஊழியர் ஒருவர், ராணியார் மறைவுக்கு பின்னர் பலர் நீண்ட காலமாக தொடர்ந்து வந்த வேலையை விட்டுவிட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ராணியார் மறைவுக்கு பின்னர், விண்ட்சர் மாளிகை மயான அமைதியுடன் காணப்படுவதாகவும், மன்னர் சார்லஸ் தம்பதி இங்கு குடியேறுவதில்லை என்ற முடிவில் இருப்பதால் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாகவும் கூறுகின்றனர்.மட்டுமின்றி, மன்னர் சார்லஸ் தமது திட்டம் என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்காத நிலையில், 14 குதிரைகள் விற்கப்பட்டது. மேலும், பால்மோரல் மாளிகையில் இருந்து ஓய்வுக்கு பின்னர் ராணியார் திரும்புவார் என்றே விண்ட்சர் மாளிகையில் பல ஊழியர்கள் கருதியதாகவும், ராணியாரை வரவேற்க அவர்கள் தயாராகி வந்ததாகவும் கூறப்படுகிறது.

கொரோனா பரவல் காலகட்டத்தில், பெரும்பாலான நேரத்தை ராணியார் விண்ட்சர் மாளிகையில் தான் செலவிட்டுள்ளார். விண்ட்சர் எஸ்டேட்டில் உள்ள மாளிகை ஒன்றில் இளவரசர் வில்லியம் தம்பதி குடும்பத்துடன் வசித்து வந்தாலும், விண்ட்சர் மாளிகையில் குடியேற அவர்களும் மறுத்துள்ளதாகவே கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!