டொலர்கள் இருந்தால், வெளிநாட்டவர்கள் இலங்கையில் நீண்டகால வீசாவைப் பெறலாம்!

Kanimoli
1 year ago
டொலர்கள் இருந்தால், வெளிநாட்டவர்கள் இலங்கையில் நீண்டகால வீசாவைப் பெறலாம்!

கொழும்பு பங்கு பரிவர்த்தனை, திறைசேரி பத்திரங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பிற உள்ளூர் முதலீடுகளில் முதலீடு செய்வதற்காக, அமெரிக்க டொலர் முதலீடுகள் அல்லது வைப்புகளை நாட்டிற்கு கொண்டு வரும் வெளிநாட்டவர்களுக்கு நீண்ட கால வீசா வழங்குவதற்கு, அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இந்த வதிவிட விசா திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் அந்தந்த நாடுகளில் இருந்து போலிஸ் அனுமதி அறிக்கையுடன் கூடுதலாக பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.
இந்த வசதி தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, பாதுகாப்பு அமைச்சின் உதவியுடன் விண்ணப்பங்களைச் செயலாக்குவது குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தால் கையாளப்படும் என்று திணைக்களத்தின்  அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விசா வழங்குவதற்கான நான்கு வௌ;வேறு முன்மொழிவுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன,
அவற்றில் மூன்று உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளன, மேலும் ஒன்று எதிர்காலத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
திட்டங்களில் ஒன்று 'கோல்டன் பெரடைஸ் விசா' திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இதன் கீழ், முதலீட்டாளர் 10 வருட வதிவிட விசாவிற்கு உரிமை பெறுவதற்கு இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக வங்கியொன்றில் 200,000 அமெரிக்க டொலர்களை வைப்பிலிட வேண்டும்.
எவ்வாறாயினும், வைப்பாளர் விசா பெற்று ஒரு வருடத்திற்குப் பிறகு 100,000 டொலர் வரை திரும்பப் பெறலாம்.
300,000 டொலர் வைப்புச்; செய்யப்பட்டால், முதலீட்டாளர், மனைவி, சார்ந்தவர்கள் மற்றும் தொடர்புடைய ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு வதிவிட விசா வழங்கப்படும், அதே நேரத்தில் 500,000 டொலர்களை முதலீடு செய்பவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் 10 ஆண்டுகளுக்கு வதிவிட விசாவிற்கு உரிமையுடையவர்கள்.
மற்றொரு பிரிவின் கீழ், நகர்ப்புறங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் 200,000 டொலர்களை முதலீடு செய்பவர் அவரின் மனைவி மற்றும் சார்ந்திருப்பவர்களுக்கு 10 வருட வதிவிட விசாவைப் பெறுவார்கள், அதே சமயம் 150,000 டொலர் முதலீட்டிற்கு, முதலீட்டாளர், மனைவி மற்றும் சார்ந்திருப்பவர்களுக்கு உரிமை உண்டு. ஐந்து வருட குடியிருப்பு விசா,பின்னர் நீடிக்கப்படலாம்.

250,000 மற்றும் 400,000 டொலர்களை திறைசேரிப் பத்திரங்களில் முதலீடு செய்பவர்கள் முறையே ஐந்து ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு வதிவிட விசாக்களுக்குத் தகுதி பெறுவார்கள்.
மற்றொரு திட்டத்தின் கீழ், பங்குச் சந்தையில் 100,000 டொலர்கள் மற்றும்  200,000 டொலர்களை முதலீடு செய்பவர்கள், அவர்களின் மனைவிமார் மற்றும் சார்ந்திருப்பவர்களுக்கு முறையே ஐந்து ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு வதிவிட விசாக்களைப் பெறுவார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!