அரச சொத்துக்களை விற்பனை செய்தேனும் டொலர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் - அமைச்சர் பந்துல குணவர்தன

Kanimoli
1 year ago
அரச சொத்துக்களை விற்பனை செய்தேனும் டொலர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் - அமைச்சர் பந்துல குணவர்தன

அரச சொத்துக்களை விற்பனை செய்தேனும் டொலர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

டொலர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் எதிர்வரும் காலங்களில் இலங்கையினால் சர்வதேச சந்தையில் கொள்வனவு செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டொலர் கையிருப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் ஏதேனும் சொத்துக்களை விற்பனை செய்தாவது இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செய்யத் தவறினால் சர்வதேசத்துடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டொலர் கையிருப்பினை 3 பில்லியன்களுக்கு மேல் பேண வேண்டுமென தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதாவது சொத்துக்களை விற்பனை செய்து வரவு செலவுத் திட்ட இடைவெளி பிரச்சினைக்கு தீர்வு காண்பது இன்றியமையாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச சொத்துக்களை விற்பனை செய்யும் போது மிகவும் அவதானத்துடன் அவற்றை மேற்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!