சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஆரம்பம்

Prabha Praneetha
2 years ago
சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஆரம்பம்

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லதண்ணி பொலிஸ்துறையினரின் ஊடாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விஷேட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக விஷேட பாதுகாப்பு பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ்துறை பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்துடன், யாத்திரிகளின் பாதுகாப்புக்கு அவசியமான அனைத்து ஏற்பாடுகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கமைய, சிவனொளிபாதமலை யாத்திரைக்கு செல்லும் பிரதான வீதி முதல், மலை உச்சிவரையில் பெருமளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுதவிர, சிவனொளிபாதமலை செல்லும் யாத்திரிகர்கள், முறையற்ற வீதத்தில் குப்பைகளை வீசினால், அதற்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் சிவனொளிபாதமலைக்கு செல்லும் வாகனங்களை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காகவும் அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!