ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை அகற்றுவதற்கு அறிவுறுத்தல்

Prathees
1 year ago
ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை அகற்றுவதற்கு அறிவுறுத்தல்

கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள பல நிர்வாக பலவீனங்கள் குறித்து பொது விவகாரங்களுக்கான குழு அல்லது கோப் குழு கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையிலான கோப் குழு முன்னிலையில் வைத்தியசாலை அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட தணிக்கை தொடர்பான தகவல்கள் மற்றும் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட கணக்காய்வு அறிக்கைகள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் கலந்துரையாடியதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை வளாகத்திற்கு சொந்தமான காணிகளை வெளி தரப்பினர் கையகப்படுத்தியமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கோப் குழுவின் தலைவர் வைத்தியசாலை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

எவ்வாறாயினும், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு சொந்தமான காணியை மூன்றாம் தரப்பினர் கையகப்படுத்தியதன் ஊடாக மோசடி இடம்பெற்றுள்ளதாக கோப் குழு உறுப்பினர் எம்.பி மதுர விதானகே மற்றும் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி விக்ரமரத்ன ஆகியோர் அங்கு தெரிவித்தனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை வளாகத்திற்கு சொந்தமான காணியின் அளவு அடையாளம் காணப்பட வேண்டும் எனவும், சட்டவிரோதமாக குடியிருப்பாளர்கள் இருப்பின் அவர்களை வெளியேற்ற சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோப் குழு பரிந்துரைத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!