விலை உயர்ந்த வலம்புரி விற்கச் சென்ற சந்தேக நபர் அதிரடிப்படையினரால் கைது
Prathees
2 years ago

விலை உயர்ந்த வலம்புரியை தம்வசம் வைத்திருந்து அதிக விலைக்கு விற்கச் சென்ற சந்தேகநபர் ஒருவர் காத்தான்குடியில் நேற்று (05) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடி ஆரையம்பதி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கல்முனை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காளி கோவில் வீதி, ஆரையம்பதி 03 என்ற முகவரியில் அமைந்துள்ள வீட்டினுள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரும் வலம்புரியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.



