ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தவிர வேறு எந்த கட்சிக்கும் செல்லமாட்டேன் - சந்திரிகாவின் முகநூல் பதிவு
Prathees
2 years ago

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகியதன் பின்னர் வேறு எந்தக் கட்சியிலும் இணையப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியிலோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியிலோ தான் இணைந்துள்ளதாக பல்வேறு ஊடகங்களில் வெளியான கூற்றுக்களை அவர் மறுத்துள்ளார்.
தனது முகநூலில் வெளியிட்டுள்ள குறிப்பிலேயே முன்னாள் ஜனாதிபதி இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அரசியல் ரீதியாக பிறந்து வளர்ந்த தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாகவே இறக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



