பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்ற அமரவீர

Prathees
1 year ago
பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக  நீதிமன்றத்திற்கு சென்ற அமரவீர

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கும் தீர்மானத்தை இடைநிறுத்துமாறு கோரி அமைச்சர் மஹிந்த அமரவீர கொழும்பு மாவட்ட நீதிமன்றில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இந்தக் கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகமவால், கூட்டமைப்பின் தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு ஜனவரி 11ஆம் திகதி நீதிமன்றில் உண்மைகளை முன்வைக்குமாறு தடை உத்தரவு மற்றும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் பிரதிவாதிகளாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கு இன்று பிற்பகல் கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் பிரதிவாதி சார்பில் ஆரம்ப ஆட்சேபனையை முன்வைத்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!