புதிய ஆண்டிற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வில் மாற்றம்
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
புதிய ஆண்டு நாடாளுமன்றம் கூடும் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாற்றத்தை செய்ய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான தெரிவுக்குழு இன்று தீர்மானித்துள்ளது.
ஜனவரி மாதம் 17 ஆம் திகதி நடைபெற இருந்த புதிய ஆண்டிற்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் புதிய ஆண்டுக்கான கூட்டத் தொடரை ஜனவரி மாதம் 17 ஆம் திகதி நடத்துவது என இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த திகதியே தற்போது மாற்றப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வானது எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான தெரிவுக்குழு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் நாடாளுமன்றத்தில் கூடியது.
இதன்போது, இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மொழி மூலமான கேள்விகளுக்கு பதில் வழங்கப்பட்டது.
இதன் பின்னர் 23 நாட்களில் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன், 2022 ஆம் ஆண்டின் இறுதி நாடாளுமன்ற அமர்வு நாளைய தினம் நடைபெறவுள்ளது.



