பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் மற்றும் மகன் மீது தாக்குதல்: இடைநிறுத்தப்பட்ட மாணவர்கள்

பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அத்துல சேனாரட்ன மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் பத்துப் பேர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் தாக்குதலில் தொடர்புடைய பத்து மாணவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டு அவர்கள் கற்றல் நடவடிக்கையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பீடாதிபதி கலாநிதி பிரபாத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் கடுமையாக தண்டிக்கப்படாது போனால் பல்கலைக்கழகங்களை நடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அதுகோரள வலியுறுத்தியுள்ளார்.
நேற்றையதினம் பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது புதல்வன் ஆகியோர் அடையாளம் தெரியாத மாணவர்கள் குழுவொன்றினால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



