நூற்றுக்கும் மேற்பட்ட பணக்காரர்களுடன் கொழும்பை வந்தடைந்த கப்பல்
Prabha Praneetha
2 years ago
அமெரிக்காவின் 108 பணக்கார சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு "Ocean Odyssey" என்ற அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த கப்பல் அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமானது. 105 மீட்டர் நீளமும் 18.5 மீட்டர் அகலமும் கொண்டது. இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்தை குறித்த கப்பல் வந்தடைந்ததுடன் டிசம்பர் 19 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திற்கு பயணிக்கவுள்ளது.
இந்தக் கப்பலில் வரும் சுற்றுலாப் பயணிகள் கொழும்புத் துறைமுகத்தில் இறங்கி சொகுசு பேருந்துகளில் சுமார் இரண்டரை நாட்கள் கொழும்பு, குருநாகல், ஹபரணை, சிகிரியா, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு சென்று எதிர்வரும் 21ம் திகதி திருகோணமலை துறைமுகத்தில் இருந்து கப்பலில் திரும்பிச் செல்லவுள்ளதாக "டேவ் மரைன்" கப்பல் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.