அடுத்த மாதம் முதல் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை ஆரம்பம்!
Prabha Praneetha
2 years ago
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் வெளியிட்டுள்ளன.
காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் புதுச்சேரி வரை இந்த பயணிகள் படகு சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த படகு சேவைக்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த பயணிகள் கப்பல் சேவையானது சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையேயான கலாச்சார உறவுகளை வலுப்படுத்தவும் உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தும் வகையில் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.