தெற்காசிய நாடுகளில் உலக அறிவுச் சுட்டெண்ணில் இலங்கை முதலிடத்தில்
#SriLanka
#Brain
#America
#Switzerland
#India
Nila
2 years ago

உலக அறிவுச் சுட்டெண்ணில் இலங்கை 43.42 சதவீதத்துடன், 79 ஆம் இடத்தில் பதிவாகியுள்ளது.
எனினும், தெற்காசிய நாடுகளில் இலங்கை முதலிடத்திலுள்ளது.
132 நாடுகளை உள்ளடக்கியதாக இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 68.37 சதவீதத்துடன், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
சுவிட்ஸர்லாந்து, சுவீடன், பின்லாந்து மற்றும் நெதர்லாந்து முதலான நாடுகள், முறையே இரண்டு முதல் ஐந்தாம் இடம்வரை தரப்படுத்தப்பட்டுள்ளன.
41.52 சதவீதத்துடன், 91 ஆவது இடத்தில் இந்தியாவும், 34.44 சதவீதத்துடன் 110 ஆவது இடத்தில் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளன.
உலக அறிவுச் சுட்டெண் பட்டியலைப் பார்வையிட றறற.ளழழசலையகெஅநெறள.டம என்ற எமது இணையத்தளத்துக்குப் பிரவேசிக்கவும்.



