தனியார் விடுதியொன்றுக்குள் நுழைந்த மர்ம கும்பல் நடத்திய வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் படுகாயம்
#Police
#SriLanka
#Arrest
Kanimoli
2 years ago

யாழ்ப்பாணம் - நல்லூர் கோவில் வீதியிலுள்ள தனியார் விடுதியொன்றுக்குள் நுழைந்த மர்ம கும்பல் நடத்திய வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்தார்.
காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று வியாழக்கிழமை(29) இரவு 7.30 மணியளவில் மூன்று உந்துருளிகளில் வந்த இனம் தெரியாத மர்மக்கும்பல் விடுதியில் நின்றவர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர்.
காயமடைந்தவர் 21 வயதான பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது.
வாள்வெட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.



