13 வயதுடைய ஆண் சிறுவன் 20 அடி உயர மரத்தில் ஏறி விழுந்து பலி
#SriLanka
#Death
#Police
Kanimoli
2 years ago

கடவத்தை ராம்முத்துகல பகுதியில் அமைந்துள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் தங்கியிருந்த 13 வயதுடைய ஆண் சிறுவன் 20 அடி உயர மரத்தில் ஏறி விழுந்து உயிரிழந்துள்ளதாக கடவத்தை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நேற்று (1) விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மரத்தில் ஏறியதாகவும், பின்னர் மரத்தில் இருந்து தவறி விழுந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
திவுலபிட்டிய, பலகல்ல பிரதேசத்தில் வசிக்கும் சிறுவனே இவ்வாறு மரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த குழந்தை ராம்முத்துகல வைத்தியசாலையில் இருந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கடவத்தை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



