களனி மகா மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் பிரதிநிதி ஒருவரும் கைது

#Arrest #Police
Prathees
2 years ago
களனி மகா மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் பிரதிநிதி ஒருவரும் கைது

களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கலும் முதன்நாயக்க மற்றும் மற்றுமொரு மாணவர் பிரதிநிதி தலங்கம பொலிஸாரால் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு மாணவர்களும் வாக்குமூலம் அளிக்க பொலிஸாரிடம் வந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூலை 10ஆம் திகதி கல்வி அமைச்சுக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கல்வி அமைச்சின் வாயிலை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்துள்ளார்.

இருவரும் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!