உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரும் வர்த்தமானி அறிவித்தல் நாளை, 4ஆம் திகதி வெளியிடப்படும்

#Election #SriLanka
Kanimoli
1 year ago
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரும் வர்த்தமானி அறிவித்தல் நாளை, 4ஆம் திகதி வெளியிடப்படும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரும் வர்த்தமானி அறிவித்தல் நாளை, 4ஆம் திகதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து  ஜனவரி 19ஆம் திகதி மாவட்ட மட்டத்தில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் எதிர்வரும் மார்ச் 19 ஆம் திகதிக்குள் 340 உள்ளூராட்சி அமைப்புகளை நிறுவுவதற்கு வழிவகை செய்யும் வகையில் மார்ச் 15 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணையகத்தின் தவிசாளர் எஸ்.ஜி;. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு கட்டமாக மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக செயல்படும் மாவட்ட செயலாளர்கள் 25 மாவட்டங்களில் நாளை வேட்புமனுக்களை ஏற்கும் திகதியுடன்; வர்த்தமானியை வெளியிடுவார்கள்
இதன்படி, 25 மாவட்டங்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என்றும் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் நியமனப் பட்டியலில் 25 வீதப் பெண்களை சேர்க்க வேண்டும், மேலும் இளைஞர்களுக்கு 30வீதப் பிரதிநிதித்துவத்திற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.
எனினும் அது தொடர்பான சட்டம் இதுவரை நிறைவேற்றப்படாததால் அது கட்டாயமில்லை.
இந்தநிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டில் வாக்களிக்கத் தகுதியுள்ள பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 1 கோடியே 66 லட்சத்து 92 ஆயிரத்து 398 ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!