அதிகாரிகள் பற்றாக்குறையால் இலங்கையில் புகையிரத நிலையங்களை மூட வேண்டிய அபாயம்!

#SriLanka #Railway
Prasu
1 year ago
அதிகாரிகள் பற்றாக்குறையால் இலங்கையில் புகையிரத நிலையங்களை மூட வேண்டிய அபாயம்!

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் மாத்தறை முதல் பெலியத்தை,தலைமன்னார் முதல் மதவாச்சி  வரையிலான புகையிரத நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சேவையில் நிலவும் பற்றாக்குறைக்கு தீர்வு காணாவிட்டால் இந்த நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரச சேவையில் 60 வயதை பூர்த்தி செய்தவர்கள் சேவையில் இருந்து ஓய்வுப் பெற வேண்டும் என அரசாங்கம் எவ்வித திட்டமிடலும் இல்லாமல் எடுத்த தீர்மானம் புகையிரத சேவை துறையை தற்போது மிக மோசமான நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

பெரும்பாலான மக்களின் பிரதான போக்குவரத்து ஊடகமாக புகையிரத சேவை காணப்படுகிறது.புத்தாண்டு காலத்தில் வழமைக்கு மாறாக அதிக புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்த வேண்டும்,ஆனால் தற்போது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கூட புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை காணப்படுகிறது.

அரசாங்கத்தின் தூரநோக்கற்ற சிந்தனையால் கடந்த மாதம் 31 ஆம் திகதி முதல் நாளாந்தம் 40 இற்கும் அதிகமான புகையிரத சேவைகள் இரத்து செய்யப்படுகின்றன.

ஏனைய அரச சேவைகளை போல் புகையிரத சேவை தனித்த சேவை அல்ல.புகையிரத சேவையில் ஒவ்வொரு பிரிவும் முக்கியமானது.ஒரு பிரிவின் சேவை பாதிக்கப்பட்டால் முழு புகையிரத சேவை கட்டமைப்பும் பாதிக்கப்படும் என்பதை தீர்மானம் எடுக்கும் அரச தரப்பினர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

புகையிரத சேவையில் 500 கனிஸ்ட மற்றும் உயர் சேவையாளர்கள் சேவையில் இருந்து ஓய்வுப் பெற்றுள்ளார்கள், இவர்களில் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளடங்குகிறார்கள்.

பெரும்பாலான புகையிரத நிலையங்களில் அனைத்து பணிகளையும் நிலைய பொறுப்பதிகாரி செய்ய வேண்டிய நிலை காணப்படுகிறது.

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சேவையில் நிலவும் ஆளணி பற்றாக்குறைக்கு தீர்வு காணாவிட்டால் எதிர்வரும் நாட்களில் மாத்தறை தொடக்கம் பெலியத்த மற்றும் தலைமன்னார் முதல் மெதவாச்சி வரையிலான புகையிரத நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும்.புகையிரத நிலைய அதிபர் சேவையில் நிலவும் ஆளணி பற்றாக்குறைக்கு விரைவான தீர்வு வழங்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!