மின்சார கட்டணங்களுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவு
#Electricity Bill
Prathees
2 years ago
மின்சாரக் கட்டணத்திற்கான செலவிற்கேற்ற விலைச் சூத்திரத்தை தயாரிப்பதற்கான யோசனை இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்து எதிர்காலத்தில் தீர்மானம் எட்டப்படும் என இன்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து அறுபத்தொன்பது இலட்சம் கையொப்பங்களைப் பெறுவதற்கான மனுவின் கையொப்பம் இடப்பட்ட மனு இன்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது.