கஞ்சாவுடன் பிடிபட்ட எஸ்எஸ்பி உள்பட 6 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

Prathees
1 year ago
கஞ்சாவுடன் பிடிபட்ட எஸ்எஸ்பி உள்பட 6 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

கைது செய்யப்பட்டுள்ள மொனராகலை பிரதேசத்திற்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார ஹேரத் உள்ளிட்ட 6 பேரை எதிர்வரும் 13ஆம் திகதி தடுத்து வைத்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று (09) மொனராகலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உலர்த்துவதற்காக தயாரிக்கப்பட்ட 650 கஞ்சா செடிகளை கண்டெடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமாரவின் உத்தியோகபூர்வ சாரதியாக கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள், வீட்டில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட், மொனராகலை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் மொரட்டுவ மற்றும் எகொடௌயன பிரதேசத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பயன்படுத்திய ஜீப் ஒன்றும், நிலத்தடி உலோகங்களை கண்காணிக்கும் ஸ்கேனிங் இயந்திரமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!