பழ தோலை வீணாக்காமல் பேஸ்பேக் செய்வது எப்படி?
பழ தோலை வீணாக்காமல் எந்தெந்த பழத்தில் ஃபேஸ்பேக் செய்யலாம் என்பதை பார்ப்போம்.
பழங்கள் நம்முடைய சருமத்திற்கு நிறைய நன்மைகளை செய்யக்கூடியவை அது மட்டுமில்லாமல் பழங்களை விட அவற்றின் தோல் ஏராளமான விட்டமின்களும் மினரல்களும்,நிறைந்து இருக்கிறது அவற்றை சருமத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் சருமத்திற்கு தேவையான நீர் சத்துக்கள்,முகத்தில் உண்டாகும் பருக்கள், வயதான தோற்றம், சரும வீக்கங்கள், முகக்கருமை ஆகியவற்றை சரி செய்யக்கூடும்.
வாழைப்பழ தோல் பேஸ்பேக்
வாழைப்பழத் தோலை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் இந்த கலவையை தேன் சேர்த்து முகத்தில் நன்றாக கழுவி விட்டு இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் அப்ளை செய்து விடுங்கள் பின்பு 20 நிமிடம் கழித்து இதனை வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவினால் முகம் பளபளப்பாகவும் தளர்ந்த சருமங்களை இருக்கமடையும் செய்யும்.
வாழைப்பழத்தில் உள்ள மினரல்கள் கண்களை சுற்றி உருவாகும் கருவளையத்தை போக்கும்,சருமத்தில் ஏற்படும் எரிச்சலைப் போக்கும்,மற்றும் பருக்களை விரட்டும்.
ஆப்பிள் தூள் ஃபேஸ் பேக்
ஆப்பிளின் தோலை சீவி கால் கப் அளவிற்கு எடுத்துக் கொண்டு ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு அரைத்துக் கொண்டு இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை உலர விடவும், நன்கு உலர்ந்த முகத்தை குளிர்ந்த நீர் கொண்டு கழுவிக் கொள்ளவும், இதுபோன்று வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் உங்கள் முகம் ஆப்பிள் போல் பளபளப்பாக இருக்கும்.
ஆப்பிள் தோலை சருமத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் சருமத்தின் நிறம் மென்படும்,சருமம் நீர் சத்துடன் இருக்கும்,புறவுதா கதிர்களின் தாக்கத்திலிருந்து சருமத்தை பாதுகாக்கும்.