வேர்க்கடலை சாப்பிடுவதால் சருமத்திற்கு இவ்வளவு நன்மைகள்

Mani
1 year ago
வேர்க்கடலை சாப்பிடுவதால் சருமத்திற்கு இவ்வளவு நன்மைகள்

வேர்க்கடலை சருமத்திற்கு அற்புத அதிசயங்களை கொடுக்கிறது வேர்கடலை ஊட்டச்சத்தின் சிறந்த ஆதாரமாகும் இது நிறைவான புரதம் உள்ளடக்கம் கொண்டு அதிக ஆரோக்கியம் அளிக்கிறது.
வேர்க்கடலை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை அறிந்திருப்பீர்கள் இதற்கு காரணமே இதில் இருக்கும் புரத உள்ளடக்கம் கொண்டதுதான் இதில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்சத்துக்கள், விட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த ஆதாரமாக இருக்கிறது இது கொழுப்பை குறைக்க உதவும் மற்றும் இதய நோய் ஆபத்திலிருந்து பாதுகாக்கும்,ஆனால் சருமத்திற்கு நல்லது என்பதை நினைத்திருப்பீர்களா?

வேர்க்கடலை சிற்றுண்டிக்கு மட்டுமல்ல இது சருமத்திற்கும் குறிப்பிட்ட தக்க நன்மைகளை உண்டாக்கும் இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் இக்ரி ரேடிகளால் ஏற்படும் சேதத்தில் இருந்து உடலை பாதுகாக்கிறது, மற்றும் இதில் உள்ள வைட்டமின் பி6 விட்டமின் E மற்றும் நியாஸின் உள்ளது, இதன் மூலம் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் புற ஊதா கதிர்கள் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற மாசுபாட்டில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.
வேர்க்கடலையில் சருமத்தை இயற்கையாகவே புதுப்பிக்கும் தன்மையுடையதால் வயதான அறிகுறிகளை குறைத்து இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

வேர்க்கடலையில் உள்ள அதிக அளவு விட்டமின் கே மற்றும் கொழுப்பு அமிலங்கள் கருவளையம் தோன்றுவதை குறைக்க செய்கிறது, நியாசின் என்பது விட்டமின் பி இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் மற்றும் கண் இரைப்பை வீக்கத்தை தடுக்க உதவுகிறது.