புறாக்களை கொன்று தின்று காணொளியை உரிமையாளருக்கு அனுப்பிய மூவர் கைது

#SriLanka #Arrest #Police #Investigation #Lanka4 #Whatsapp
Prathees
1 year ago
புறாக்களை கொன்று தின்று  காணொளியை உரிமையாளருக்கு அனுப்பிய மூவர் கைது

உல்லாசமாக வளர்க்கப்பட்ட புறாக்களை திருடி, கொலை செய்து அவற்றை எரித்து டிக் டாக் வீடியோவாக வெளியிட்ட இளைஞர்கள் குழுவை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இது தொடர்பான காணொளியை வாட்ஸ் அப் மூலம் புறாக்களின் உரிமையாளருக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

 இந்த சம்பவம் அளுத்கம தர்காவில் இருந்து பதிவாகியுள்ளது. 

சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். 

அளுத்கம பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

கடந்த 26ஆம் திகதி அளுத்கம தர்கா நகரம், இஸ்தபுள்ள வீதி பகுதியில் புறாக்கள் இருந்த கூண்டை உடைத்து இந்தச் செயலை மேற்கொண்டுள்ளனர். 

 சம்பவம் தொடர்பில் 18 மற்றும் 20 வயதுடைய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் நாளை (30) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!