முதல் காலாண்டில் CHF 78.4 மில்லியன் இலாபம் - மீண்டும் சுவிஸ் எயர் கடன் அற்றதாகியது.

#Switzerland #Lanka4 #சுவிட்சர்லாந்து #லங்கா4 #கடன்
முதல் காலாண்டில் CHF 78.4 மில்லியன் இலாபம் - மீண்டும் சுவிஸ் எயர் கடன் அற்றதாகியது.

சுவிட்சர்லாந்தின் சுவிஸ் எயர் விமான சேவையானது முதல் காலாண்டு இயக்க முடிவில் 78.4 மிலியன் பிராங்கை எட்டியது. இது கடந்த ஆண்டை விட குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப் பகுதியில் இயக்க வருமானம் 1.1 பிலியன் பிராங்குகளாக இருந்தது. இது முன்னைய ஆண்டை விட சுமார் 55 சதவீதம் அதிகமாகும்.

 சுவிஸ் எயாரின் இந்த வலுவான முடிவுக்கான காரணம் உயர் மட்ட விமானத் திட்ட ஸ்திரத்தன்மை, மேம்பட்ட செலவுத் தளம் மற்றும் சுவிட்சர்லாந்தின் வலுவான வீட்டுச் சந்தை என்பனவாகும்.

சுவிஸ் எயர் தலைமை நிர்வாக அதிகாரி  மார்க்கஸ் பிங்கர்ட் கருத்து தெரிவிக்கையில் நமது கட்டமைப்பு நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளமை மற்றும் சாதகமான சந்தை நிலவரம் என்பனவற்றால் தொடர்ந்து பயனடைய முடிந்தது என்று செய்திக்குறிப்பில் மேற்கோள் காட்டினார்.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!