மலேசியாவுடனான ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது!
#SriLanka
#Malasia
#Scientists
Mayoorikka
1 year ago

இலங்கையின் விவசாய ஆராய்ச்சிக் கொள்கைப் பேரவை மற்றும் மலேசியாவின் விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் ஆகியவற்றுடன் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான விவசாயத் துறையில் விஞ்ஞான ஒத்துழைப்பை முறைப்படுத்தவும் தொடரவும் இலங்கை விவசாய ஆராய்ச்சிக் கொள்கைப் பேரவைக்கும் மலேசியாவின் விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்துக்கும் இடையில் 2016 ஆம் ஆண்டு 5 வருட காலப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் செல்லுபடியாகும் காலம் தற்போது முடிவடைந்துள்ளது
இந்த நிலையில் ஒப்பந்தத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.



