இலங்கையில் விலங்கு இறைச்சி உண்ண தடை!

#SriLanka #Food
Mayoorikka
1 year ago
இலங்கையில் விலங்கு இறைச்சி உண்ண தடை!

வடமேற்கு மாகாணத்தில் 2000க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கட்டி தோல் நோய் பரவியுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

 வடமேற்கு மாகாணத்தில் உள்ள 46 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 33 இடங்களில் கால்நடைகளுக்கு இந்நோய் பரவியுள்ளதாக அதன் வடமேற்கு மாகாண பணிப்பாளர் டொக்டர் பி.சி.எஸ்.பெரேரா தெரிவித்தார்.

 இதன் காரணமாக வடமேற்கு மாகாணத்திற்குள் கால்நடைகளை கொண்டு செல்வது மற்றும் வடமேற்கு மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

 நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளின் இறைச்சியை உட்கொள்வது பாதுகாப்பானதல்ல என வடமேல் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.