நள்ளிரவில் இருந்து எரிபொருளின் விலையில் மாற்றம்!

#SriLanka #prices #Fuel
Mayoorikka
1 year ago
நள்ளிரவில் இருந்து எரிபொருளின் விலையில் மாற்றம்!

பெற்றோல் ஒக்டேன் 92 லீற்றர் 15 ரூபாவினாலும் இலங்கை மண்ணெண்ணெய் 50 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி. வி. சானக இன்றிரவு கூறினார்.

 இதன்படி, சிலோன் ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 318 ரூபா எனவும், இலங்கை மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 245 ரூபா எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

 இலங்கை கைத்தொழில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும், கைத்தொழில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 270 ரூபா எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

 லங்கா பெற்றோல் ஒக்டேன் 95 லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினாலும், லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

சிலோன் ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 310 ரூபாவாகவே தொடர்கிறது.