இந்தியாவின் மும்பை- புனே விரைவு பாதையில் இரசாயன பவுசர் லொறி கவிழ்ந்ததில் 4 பேர் பலி

#India #Accident #Road #Lanka4 #விபத்து #லங்கா4 #Mumbai
இந்தியாவின் மும்பை- புனே விரைவு பாதையில் இரசாயன பவுசர் லொறி கவிழ்ந்ததில் 4 பேர் பலி

இன்று இந்தியாவின் மும்பை-புணே விரைவுச் சாலையில் பவுசர் லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

 மும்பை-புணே விரைவுச் சாலையில் ரசாயனம் ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த பவுசர் லொறி, கண்டலா வனப்பகுதியில் உள்ள குனே பாலத்தின் அருகே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

 இதில் பவுசர் லொறி தீப்பிடித்ததில் பெரும் விபத்து ஏற்பட்டது. ரசாயனம் கலந்த லொறி என்பதால் தீ பாலத்தின் அடியில் பரவத் தொடங்கியது. தீ பிழப்பானது பாலத்தின் கீழ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த குடும்பத்தினர் மீது விழுந்தது.

 இந்நிலையில் 12 வயது சிறுவன் உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.