அடுத்த வாரம் நியமிக்கப்படுவுள்ள புதிய பொலிஸ் மா அதிபர்

#SriLanka #Police #Lanka4
Kanimoli
3 years ago
அடுத்த வாரம் நியமிக்கப்படுவுள்ள புதிய பொலிஸ் மா அதிபர்

புதிய பொலிஸ் மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன மார்ச் 26 அன்று ஓய்வு பெறவிருந்த நிலையில் அரசாங்கம் அவருக்கு மூன்று மாத சேவை நீடிப்பை வழங்கியது.

 பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் சேவைக் காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான தேஷ்பந்து தென்னகோன், நிலந்த ஜயவர்தன, லலித் பத்திநாயக்க, பிரியந்த வீரசூரிய மற்றும் அஜித் ரோஹன ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதுடன், யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தீர்மானம் எடுக்கப்படவில்லை.

 இது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இடம் வினவிய போது, ​​பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படும் அதிகாரி தொடர்பில் ஜனாதிபதி வருகை தந்த பின்னர் அவருடன் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதாக தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4