சம்மாந்துறை கல்முனை பிரதான வீதியில் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் பாய்ந்து பஸ் விபத்து

#SriLanka #Police #Accident #Bus #Lanka4
Kanimoli
3 years ago
சம்மாந்துறை கல்முனை பிரதான வீதியில் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் பாய்ந்து பஸ் விபத்து

கதிர்காமத்தில் இருந்து யாத்திரர்களை ஏற்றிக் கொண்டு அம்பாறை வழியூடாக மட்டக்களப்புக்கு சென்று கொண்டிருந்த தனியார் போக்குவரத்து பஸ் ஒன்று இன்று அதிகாலை 03 மணியளவில் சம்மாந்துறை வங்களாவடிப் பிரதேசத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

 இந்த விபத்தில் 09 பேர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இதே வேளை, பஸ் சாரதி விபத்து நடந்தவுடன் தப்பி ஓடிவிட்டதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4