விசா காலத்தை மீறி தங்கியிருப்பவர்களுக்கான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது

#SriLanka #Tourist #Lanka4 #இலங்கை #லங்கா4 #Visa
விசா காலத்தை மீறி தங்கியிருப்பவர்களுக்கான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது

விசா காலத்தை மீறி இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

 அதன்படி 7-14 நாட்களுக்கு 250 அமெரிக்க டொலர்களாகவும், 14 நாட்களுக்கு மேல் தங்கியிருப்பவர்களுக்கு 500 அமெரிக்க டொலர்களாகவும் அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன், அபராதத்துடன் விசா கட்டணமும் செலுத்தப்பட வேண்டும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் பிரிவு 23 (அத்தியாயம் 351) இன் கீழ் இந்த வர்த்தமானி பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 இதேவேளை ஆரம்ப வீசா காலாவதியான நாளிலிருந்து 7 நாட்களுக்குள் இலங்கையை விட்டு வெளியேறும் ஒருவர் புறப்படும் விமான நிலையத்தில் உரிய விசா கட்டணத்தை செலுத்தாமல் இலங்கையை விட்டு வெளியேற முடியும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4