சுவிட்சர்லாந்தின் சர்க்கரை போதை ஏன் மாறுகின்றதில்லை?

#Switzerland #sugar #people #Lanka4 #சுவிட்சர்லாந்து #லங்கா4
சுவிட்சர்லாந்தின் சர்க்கரை போதை ஏன் மாறுகின்றதில்லை?

சுவிஸ் மக்கள் சர்க்கரையுள்ள இனிப்புக்கள், சொக்கலேட்டுக்கள், மற்றும் குளிர்பானங்களில் உண்மையான பேரார்வம் கொண்டவர்கள். சுவிஸ் குடும்பங்களில், சர்க்கரை நுகர்வானது ஐரோப்பாவில் மிக அதிகமாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் மக்களின் சர்க்கரை நுகர்வு உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த படி ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 50 கிராம் அளவை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

 ஏற்கனவே 2015 ஆம் ஆண்டில், WHO அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் மற்றும் உடல் பருமன் அதிகரிப்பு மற்றும் நீரிழிவு, இருதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களைப் பற்றி எச்சரிக்கை விடுத்திருந்தது.

 சுவிட்சர்லாந்தில், வயது வந்தோரில் குறைந்தது 40% அதிக எடை கொண்டவர்கள், ஐந்து பேரில் நான்கு பேர் இந்த நோய்களால் இறக்கின்றனர். அதனுடன் தொடர்புடைய சுகாதாரச் செலவுகள் வருடத்திற்கு CHF50 பில்லியன் ($58 பில்லியன்) அல்லது மொத்த சுகாதாரச் செலவுகளில் 80% என மதிப்பிடப்பட்டுள்ளது.

 பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் பிரித்தானியா போன்ற பல நாடுகள் சர்க்கரை வரிகள், தெளிவான லேபிள்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்ட விளம்பரங்களுக்கு தடை போன்ற நடவடிக்கைகள் மூலம் உணவு மற்றும் பானங்களில் சர்க்கரையின் அளவைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

சுவிஸிலுள்ள சுகாதார அமைப்புக்கள் முறையீடுகள் தெரிவித்திருந்த போதிலும் இந்த பிரச்சினைக்கு சுவிட்சர்லாந்து நடவடிக்கைகள் எதையும் அறிமுகப்படுத்தவில்லை. ஆராய்ச்சியாளரும் நிபுணருமான விர்ஜினி மன்சுய் ஆபர்ட் கூறுகையில்  "50% மக்கள் பருமனானவர்கள் மற்றும்/அல்லது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவைப் போல் நாங்களும் உருவாக விரும்பவில்லை என்றால், நாங்கள் கூடிய விரைவில் செயல்பட வேண்டும்" என்கிறார்.

ஆனால், பல பில்லியன் பிராங்குகள் மதிப்புள்ள உணவுத் தொழிலுக்கு முட்டுக்கட்டை போட அரசியல்வாதிகள் தயக்கம் காட்டுகின்றனர். உதாரணமாக லொசானிலிருந்து அதிக தொலைவிலில்லாத நெஸ்லே போன்ற நிறுவனங்கள் ஆகும்.